உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னிப் பிரவேச வைபவம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னிப் பிரவேச வைபவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னிப் பிரவேசம் என்கின்ற ஆத்மார்த்த நாள் விழா நடந்தது. திருக்கோவிலூர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அம்மன் அக்னிப்பிரவேசம் என்கின்ற ஆத்மார்த்த நாள் விழா காலை 7:00 மணிக்கு துவங்கியது. கலச ஸ்தாபனம், ஹோமம், அபிஷேகம், பூர்ணாகுதி, அம்மன் 108 கோத்ரத்துடன் அக்னியில் இறங்கும் வைபவம், புஷ்பயாகத்தில் அம்மன் அரூப காட்சியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !