இடது கண் துடித்தால்...
ADDED :1386 days ago
சுக்ரீவன் ராமரிடம், ‘‘ராமா! இனி சுகமோ, துக்கமோ நம் இருவருக்கும் ஒன்று தான்!’’ என்று சொல்லி நண்பனாக சேர்ந்தான். அப்போது பலசாலியான அனுமன், ஒரு மரக்கிளையை முறித்து நெருப்பு மூட்டினார். அக்னி சாட்சியாக நண்பர்கள் இருவரும் வலம் வந்து ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர். அப்போது அசோக வனத்தில் இருந்த சீதையின் இடதுகண் துடித்தது. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை உண்டாகும். தனக்கு நல்ல காலம் வந்து விட்டதை இந்த அறிகுறியால் உணர்ந்த சீதை மகிழ்ந்தாள்.