உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 7ம் தேதி குருபூஜை

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் 7ம் தேதி குருபூஜை

புதுச்சேரி : திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் வரும் 7ம் தேதி குரு பூஜை விழா நடக்கிறது. திலாஸ்பேட்டையில் அப்பா பைத்தியம் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 7ம் தேதி, 22ம் ஆண்டு குரு பூஜை விழா நடக்கிறது.அன்று காலை 7:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடக்கிறது. 7:30 மணிக்கு அப்பா பைத்தியம் சுவாமிக்கு, தமிழில் வேள்வி வழிபாடு 9:00 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடக்கிறதுகாலை 10:00 மணிக்கு அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, 12:00 மணிக்கு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடக்கிறது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !