அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1605 days ago
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை அமாவாசை தினத்தையொட்டி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்தனர்.