உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் மகா சித்தர் பீடத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம்

மேட்டுப்பாளையம் மகா சித்தர் பீடத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம்

மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் வைபவத்தில் புதிதாக பதினெட்டாம்படி கருப்புசாமி குறைதீர்க்கும் கருப்பர் சுவாமி, உற்சவர்  பிரதிஷ்டை வைபவமும் நடந்தது. தொடர்ந்து புண்ணியாவதனம் கலச ஆ வாகனம் கணபதி ஹோமம், மகா ருத்ர ஹோமம், நடைபெற்று மகா பூர்ணாகதி அதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரருக்குமகா அன்னாபிஷேகம், உபச்சாரங்கள் மகா தீபாராதனை அன்னதானமும் நடைபெற்றது. பீடத்தில் வைத்தீஸ்வரர் உடனமர் மங்களாம்பிகை, ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ பால திரிபுரசுந்தரி, சித்தர்கள் அகத்தியர் மற்றும் போகர் உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை மயூரம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !