உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் திருமணிக்கூடம் கிராமத்தில் அமைந்துள்ள  108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐப்பசி 4ம் தேதி திருநாங்கூர் ஸ்ரீ வன் புருஷோத்தமன் பெருமாள் கோவிலில் இருந்து மணவாள மாமுனிகள் எழுந்தருளி ஹோமத்துடன் 7 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து  இன்று காலை பூர்ணாஹுதி நடந்தது தொடர்ந்து யாகசாலையில் இருந்து  கடங்கள் புறப்பட்டு  கோவில் விமானத்தை  அடைந்த பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக  நடைபெற்றது. தொடர்ந்து  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை சேவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !