வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அக்னி பிரவேச வைபவம்
ADDED :1385 days ago
புதுச்சேரி : வாசவி கன்னிகா பரமேஸ் வரி கோவிலில் அக்னி பிரவேச வைபவம் நடந்தது. புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதி, காந்தி வீதி சந்திப்பில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, ஆர்ய வைசிய யுவஜன சேவா சங்கம் சார்பில், 34ம் ஆண்டு அக்னி பிரவேச வைபவம் நேற்று நடந்தது.காலை 10:35 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், அதைத் தொடர்ந்து புஷ்பயாகம் நடந்தது. அதில், 20 வகையான, 200 கிலோ பூக்களால் பூஜை செய்யப் பட்டது. இந்தாண்டு முதல் முறையாக, பெண்கள் விரத மாலை அணிந்தனர்.