உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வால்பாறை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வால்பாறை: வால்பாறை, பச்சமலை எஸ்டேட் மகாமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் காலயாக சாலை பூஜை நட ந்தது. தொடர்ந்து மூலமந்திர ஹாமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து, பக்தர்கள் கோவிலை வலம் வந்தனர். அதன்பின் விமான கலசத்துக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு இளநீர், பால், தயிர், மஞ்சள், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !