தன்வந்திரி பீடத்தில் 16.8 அடி உயரமுள்ள கல் கருடர் பிரதிஷ்டை
ADDED :1434 days ago
வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில், 16.8 அடி உயரமுள்ள கல் கருடர் பிரதிஷ்டை விழா நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 16.8 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கள ஆரத்தி, மகா அபி ேஷகம் நடந்தது. திருமலைக்கோடி நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, தொழிலதிபர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 48 மண்டல பூஜை வரும் மார்ச், 28 வரை நடைபெற உள்ளது.