தொண்டபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1443 days ago
கடலுார்: தொண்டமாநத்தம் தொண்டபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் தொண்டபுரீஸ்வரர் கோவிலில் வலம்புரி விநாயகர், மகா நந்திகேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம்விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜைநடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து,கும்பாபிஷேகம் நடந்தது.