திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வைரவேல் காணிக்கை
ADDED :1441 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை லட்சுமணன்-துர்கா மகன்கள் சௌபாக்கியா டைமண்ட்ஸ் உரிமையாளர்கள் பாலகுமார், சபரிபாபு ஆகியோர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வைரவேல் காணிக்கையாக வழங்கினர். அவர்களுடைய உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடி பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர். அவர்களது ஏற்பாட்டில் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்தது வைரவேல் சாத்துகுடியாகி தீபாரதனை நடந்தது. இரண்டே கால் அடி உயரமுள்ள அந்த வேலின் மேல் பகுதியில் வைர கற்கள் வைக்கப்பட்டுள்ளன.