சாரை சாரையாக பழனி நோக்கி வரும் பாதயாத்திரை பக்தர்கள்
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு. ஆ)ரரர பாதயாத்திரை பக்தர்கள் சாரை சாரையாக வருகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச பாதயாத்திரையாக வரும் அளவில் பாதயாத்திரை பக்தர்கள் சாலைகளில் ஆட்டம் பாட்டத்துடன் சாரை சாரையாக நடந்து வந்தனர். பழநி பழைய தாராபுரம் ரோடு சாலையில் ஈரோடு நாமக்கல் சேலம் பகுதியில் முருகன் வேடமிட்டு நடந்து வந்தனர். பாதயாத்திரை பக்தர்களுடன் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில் அதிக ஒலியுடன் கூடிய ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆயக்குடி பகுதியில் இருந்து பழநி வரும் வழியில் மூன்று பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் அதிக ஒலியுடன் பாடல்கள் இசைப்பதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ஒலி மாசுவை தடுக்க நகருக்குள் வருவதற்கு முன் வாகனங்களின் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்களின் பாடல் ஒலியே குறைத்து இசைக்க போலீசார் அறிவுறுத்த வேண்டும். பாதயாத்திரை வரும் சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்க அறிவுறுத்த வேண்டும்.