விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்றம்
ADDED :1379 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. காலை 10 மணியளவில் நடராஜர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியதும், சுவாமி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிவனடியார்கள் கயிலை வாத்தியங்கள் வாசிக்க கொடியேற்றம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனர். முக்கிய நிகழ்வாக 13ம் தேதி விபசித்து முனிவருக்கு காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. 16ம் தேதி தேரோட்டம், 17ம் தேதி மாசி மகம், 18ம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.