உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ரதசப்தமி உற்ஸவ விழா

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ரதசப்தமி உற்ஸவ விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ரதசப்தமி உற்ஸவ விழா நடந்தது. இன்று காலை 9 மணி அளவில் திருப்புல்லாணி கோயில் அருகே உள்ள திருக்குறுங்குடி திருஜீயர் மடத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆதிஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. திருக்குறுங்குடி ஜீயர் மடத்தில் ஐம்பதாவது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மாலை சூரிய பிரபை வாகனத்தில் உற்ஸவ மூர்த்திகளின் வெளிப் பிரகார நான்கு ரதவீதி உலா நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல்அலுவலர் ஸ்ரீதரன், பேஸ்கர் கண்ணன், திருக்குறுங்குடி மடத்தின் மேனேஜர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !