பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்குரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
பழநி முருகன் கோவிலின் உப கோவிலான கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி பிப்.28.,ல் மூகூர்த்த கால் நடப்பட்டது. பிப்.,1ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. நேற்று (பிப்., 8) கொடியேற்றம் நடைபெற்றது. பிப்., 15 அன்று திருக்கல்யாணம் நடைபெறும். பிப் 16ம் தேதி குறைந்த அளவிலான பக்தர்களுடன் தேரோட்டம் நடைபெறும். பிப்., 17 அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். வண்டி மாகாளி அம்மன் ஊர்வலம் பூச்சொரிதல் ஊர்வலம் நடைபெறாது. விழாவின் முக்கிய நினைவுகள் அனைத்தும் திருக்கோயில் வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகள் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.