காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் . ஆனால் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சராசரியாக பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் இருந்தது ஆனால் கடந்த 3 மாத காலமாக வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி முதல்ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தியதை கணக்கெடுக்கும் பணி கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு முன்னிலையில் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு காலை 7 மணி முதல் கணக்கெடுப்பு நிகழ்ச்சி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது .இதில் பணமாக ஒரு கோடியே 13 லட்சத்து 33 ஆயிரத்து 669 ரூபாயும், தங்கம் 204 கிராம், வெள்ளி 520.300 கிலோ இருந்ததாகவும் மேலும் வெளிநாட்டினர் செலுத்திய தங்கள் காணிக்கை 57 டாலர்கள் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார்.