ஜெயம் தரும் செந்துாரான்
ADDED :1376 days ago
சூரபத்மனை வென்ற மகிழ்ச்சியுடன் முருகப்பெருமான் அருள்புரியும் தலம் திருச்செந்துார். இரண்டாம் படைவீடான இதற்கு ‘வெற்றி மாநகர்’ என்னும் பொருளில் ‘ஜெயந்தி புரம்’ என்றும் பெயருண்டு. ‘ஜெயந்தி’ என்னும் சொல்லே ‘செந்தில்’ எனத் திரிந்தது. முருகனின் வேலால் உருவான நாழிக்கிணறு தீர்த்தம் இங்குள்ளது. சூரனை வதம் செய்த பாவம் தீரும் விதமாக சிவபூஜைக்குரிய தாமரை மலர், ருத்ராட்சமாலை தாங்கியபடி முருகன் காட்சியளிக்கிறார். கடல்தலமான இங்கு மாசி மகத்தன்று நீராடி முருகனைத் தரிசிப்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.