நன்மை தருவார் கோயிலில் சப்பரத்தில் சுவாமி உலா
ADDED :1532 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா ஐந்தாம் நாளில், சுவாமி, அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1431 பசலி மாசி திருவிழா ஐந்தாம் திருநாள் இரவு சப்பரத்தில் திருவீதி உலா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.