உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருவொற்றியூர் : தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுதோறும், மாசி மாதம், பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். இவ்வாண்டும் கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், சர்பம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார். விழாவின், மிக முக்கிய நிகழ்வான சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம், இன்று (13ம் தேதி) காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !