உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு

ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை ஓராண்டு நிறைவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்து ஓராண்டு நிறைவு தினத்தை யொட்டி நேற்று சிருங்கேரி மடத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பழமையான ஸ்படிகலிங்கம் சேதமடைந்ததால், கடந்தாண்டு பிப்., 13ல் சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் புதிய ஸ்படிக லிங்கத்தை கோயிலுக்கு வழங்கி பிரதிஷ்டை செய்தனர். இதன் ஓராண்டு நிறைவு தினத்தை யொட்டி நேற்று சிருங்கேரி மடத்தின் சார்பில் கோயிலில் சுவாமி சன்னதியில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை மகா தீபாராதனை நடந்தது. இதில் சிருங்கேரி சாரதா பீடத்தின் ராமேஸ்வரம் கிளை மடத்தின் நிர்வாகி மணிகண்டி நாராயணன், நிர்வாகிகள் பலர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !