கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம்
ADDED :1373 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், வரும் மார்ச் மாதம் பங்குனி உத்திரப் பெருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், கோவில் குருக்கள் இணைந்து, பந்தல்காலுக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்க, பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.