நன்மை தருவார் கோயிலில் யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா
ADDED :1647 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா எட்டாம் நாளில் நேற்று (15ம் தேதி) சுவாமி, அம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 1431 பசலி மாசி திருவிழா எட்டாம் நாளான நேற்று (15ம் தேதி) இரவு பூப்பல்லாக்கு, யானை வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் இறைவன் இறைவியை தரிசனம் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவமும், கோயில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.