ராயன் கருப்பன் கோயில் மாசித்திருவிழா
ADDED :1370 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ராயன் கருப்பன் கோயில் மாசி திருவிழா நடந்தது. இக்கோயிலின் களரி திருவிழா ஆண்டுதோறும் மாசி மகத்தையொட்டி நடைபெறும். இந்தாண்டு பிப். 9 ம் தேதி விழா கமிட்டியினர் பிரான்மலை உச்சிக்குச் சென்று தீர்த்தமாடி வந்தனர். பிப்.14 ல் முழுவீரன் தெருவில் உள்ள கோயில் வீட்டிலிருந்து சாமி ஆயுதங்கள் புதுவயலில் உள்ள ராயல் கருப்பன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இரவு சாமியாட்டம் நடந்தது. அம்மன், பெரியகருப்பு, சின்னகருப்பு, வீரன் உள்ளிட்ட சாமிகளுக்கு படையல் போடப்பட்டு வழிபாடு நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர். திருவிழாவில் கரகம் எடுத்தல், அரிவாளில் ஏறி குறி சொல்லுதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 2 ம் நாளான நேற்று கிடா வெட்டி பலி கொடுக்கப்பட்டு வழிபாடு நடந்தது.