வடபழநி ஆண்டவர் கோவிலில் தீர்த்தவாரி
ADDED :1369 days ago
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், நாளை வியாழக்கிழமை, தீர்த்தவாரியும், சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போது, 48 நாள் மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு, மாசி மக புறப்பாடு, நாளை நடைபெற உள்ளது. மாசி மகத்தை முன்னிட்டு, மதியம் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு 9:௦௦ மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.தீர்த்தவாரி மற்றும் சுவாமி புறப்பாடில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமியின் அருளைப் பெற வேண்டுமாய், கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.