தேரில் எழுந்தருளிய அரங்கநாத சுவாமி: மாலை தேரோட்டம்
ADDED :1366 days ago
காரமடை : அரங்கநாத சுவாமி திருக்கோவில் திருத்தேர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமான் எழுந்தருளினார்.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாதப் பெருமாள், ஒவ்வொரு வாகனத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று காலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமான் எழுந்தருளினார். அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.