நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1666 days ago
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில் மாசி மாதம் சதுர்தசி திருநாள் முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அலங்காரத்தை தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.