அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED :1365 days ago
மானாமதுரை: மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசிமக தெப்ப உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி மகத்தை ஒரு விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று மாசி மக உற்ஸவ விழாவை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பாக உள்ள தெப்பத்திற்கு எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண் பக்தர்கள் தெப்பகுளத்தை சுற்றி அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபட்டனர்.