உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆக.2ல் தேரோட்டம்!

தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆக.2ல் தேரோட்டம்!

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 25 ல் கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா துவங்கிறது. தினமும் காலை 8 மணிக்கு கேடயத்திலும், இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், கருடவாகனம், சேஷவாகனம், அன்ன வாகனம், பூப்பல்லக்கு உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு மற்றும் வீதி உலா நடைபெறும். ஆக. 2 மாலை 3 மணிக்கு திருத்தேரோட்டமும், ஆக.4ல் தீர்த்தவாரியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறும். கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !