செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
ADDED :1360 days ago
செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசி மகதீர்த்தவாரி நடந்தது.
இதில் சிங்வரம் ரங்கநாதர் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், செஞ்சி கோதண்டராமர் கோவில் சக்கரத்தாழ்வார், செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர், திருவத்திமலை வெங்கடேசபெருமாள் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், நெகனுார் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் எழுந்தருளி சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.