உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால்: காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். பகவானை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நோய் தொற்று காரணமாக சரியானமுறையில் கோவிலுக்கு பக்தர்கள் வருவதில்லை இதனால் தற்போது இயல்புநிலை திரும்பும் நிலையில் நேற்று மாசிமாதம் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைப் புரிந்தனர். முன்னதாக நளன் குளத்தில் உள்ள விநாயகரை தரிசனம் மேற்கொண்ட பின்னர் சனிஸ்வரபகவானை தரிசனம் செய்தனர்.மேலும் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களை ஆலயத்தில் அனுமதித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வரபகவானை தரிசனம் செய்தனர்.மேலும் எஸ்.பி.,நித்தின்கவால் தலைமையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !