உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வரும் 27 ல் மாசிக்கொடை விழா துவக்கம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வரும் 27 ல் மாசிக்கொடை விழா துவக்கம்

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா பிப் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கொடைவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். நடப்பு ஆண்டு, மாசி மாதக் கொடைவிழா வரும் பிப் 27ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடாக பந்தல்கால் நடும் விழா மற்றும், ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற உள்ள 85ஆவது சமய மாநாடு ஆகியவற்றுக்கான பந்தல்கால் நடும் விழா கடந்த 18ம் தேதியன்று நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !