உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் சந்தான சேவையுடன் தேர்த் திருவிழா நிறைவு

காரமடையில் சந்தான சேவையுடன் தேர்த் திருவிழா நிறைவு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சந்தான சேவையுடன், மாசிமகத் தேர்த்திருவிழா நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ல் தேரோட்டம் நடந்தது. 18 ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 19 ல் சேஷ வாகனத்தில் தெப்போற்சவம் நடந்தது. விழாவின் நிறைவு நாளில் சந்தான சேவை நடந்தது. இவ்விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின்பு புஷ்பப் பல்லக்கில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து தேர் செல்லும், நான்கு வீதிகளில் உள்ள பலி பீடங்களுக்கு பூஜை செய்து, கங்கணங்கள் விமர்சனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !