ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் மாடுகள் உலா : பக்தர்கள் பீதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் உலாவரும் மாடுகளால் பக்தர்கள் பீதி அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இங்கு பசு மாடுகளுக்கு உணவு தானம் செய்யுங்கள் என கூறி பெண்கள் கீரை விற்கின்றனர். இதனால் அக்னி கடற்கரையில் சுற்றி திரியும் 50க்கு மாடுகள் கீரை உண்ணும் ஆவலில், வேகமாக வரும் போது பக்தர்களை முட்டி தள்ளுவதால், பலரும் காயம் அடைகின்றனர். இந்த மாடுகளை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதால், உலா வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பக்தர்கள் பீதியில் கோயிலுக்கு தரிசிக்க வேண்டிய அவலம் உள்ளது. எனவே மாடுகளை அப்புறப்படுத்தி இதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.