உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேத பாராயணம் மற்றும் மகா ருத்ரம், ஹோமங்கள்

வேத பாராயணம் மற்றும் மகா ருத்ரம், ஹோமங்கள்

 சென்னை : திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் வேதபாராயணம் டிரஸ்ட் சார்பில், உலக நன்மைகளுக்காக வேத பாராயணம் மற்றும் மகா ருத்ரம், ஹோமங்கள், 13ம் தேதி முதல், 15ம் தேதிவரை மூன்று நாட்கள் திருவெண்காடில் நடைபெற்றது.சதுர்வேத பாராயணம், செகலபதி சுப்பரமண்ய கனபாடிகள், வடகுடி டி சங்கர ராம தீக்ஷிதர் தலைமையில் விசேஷ ஹோமங்கள் நடந்தது. அதேபோல், நவக்ரஹ ஹோமம், நக்ஷ்த்ர ஹோமம், சுதர்சன ஹோமம், ஸ்ரீ ராமசடாக்ஷர ஹோமம், சுப்ரமண்ய சடாக்ஷரி ஹோமங்களும் நடைபெற்றது.மேலும்,ஸ்ரீ அகோராஸ்திர ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்களும், சிவஸ்ரீ டி.ஏ. தக்ஷிணா மூர்த்தி சிவாச் சாரியர்கள் தலைமையில் நடந்தது.வேதவித்வான்களை, டிரஸ்ட் சார்பில், எஸ்.சந்திரன் கவுரவித்தார். தொடர்ந்து, 85ம் ஆண்டுக்கான ஹோமம், 2023ல் மார்ச் 4ம் தேதி முதல், 14ம் தேதி வரை, 121 வேத வித்வான்கள் முன்னிலையில், திருவெண்காடில் நடைபெறும் என, டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !