உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருவ மழை வேண்டி களம் எழுத்து பூஜை

பருவ மழை வேண்டி களம் எழுத்து பூஜை

மேட்டுப்பாளையம்: பருவ மழை பெய்ய வேண்டி, மேட்டுப்பாளையத்தில், களம் எழுத்து பூஜை நடந்தது.

கேரளாவின் புகழ்பெற்ற முக்கிய கோவில்களில், மக்கள் வேண்டுதலுக்காக களம் எழுத்து பூஜைகள் நடத்துவது வழக்கம். இதில் முக்கிய சுவாமிகளின் அவதாரங்களை தத்ரூபமாக வரைந்து, மக்களின் கோரிக்கையை முன் வைத்து, பூஜைகள் செய்வது வழக்கம். மேட்டுப்பாளையத்தில், முதன் முறையாக, மகாமாரியம்மன் கோவிலில் இந்த களம் எழுத்து சிறப்பு பூஜை நடந்தது. சிவனின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான, வேட்டைக்கு ஒரு மகன் அவதாரத்தை தத்ரூபமாக வரைந்து, அதற்கு மலர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் நாட்டு மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், இயற்கை சீற்றம் இல்லாமல் பருவமழை பெய்யக்கோரி, இந்த பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையை சபரிமலை முன்னால் மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராத மூர்த்தி சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் அச்சு சுவாமி, நிர்வாகிகள் சிவனேசன் கணேஷ், சதீஷ், செந்தில் உள்ளிபட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !