உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நுங்கம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு

நுங்கம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு

நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் காலை, மாலை என இரண்டு காலமும் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டு வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயா பாண்டியன்; ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர். அவருக்கு சொந்தமாக, நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்து தெருவில், 10 கிரவுண்ட் நிலத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் தினசரி இருகால பூஜையும் நடந்தேறி வந்ததாகவும், தற்போது வேறு ஒருவர் கையில் பராமரிப்பு சென்றுவிட்டதால் பூஜைகள் சரி வர நடவடிக்காமல் பூட்டியே கிடப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகியிடம் கேட்டபோது கூறியதாவது:கோவிலை பராமரிப்பதற்காக இதற்கு முன் பணியமர்த்தப்பட்டவர்கள், கோவில் வளாகத்தில் மது அருந்துவது, அசைவ விருந்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதை அறிந்த உரிமையாளர் அவர்களை பணியிலிருந்து நீக்கினார். தற்போது, கோவிலில் தினசரி இருகால பூஜையை பூசாரி விஜயன் என்பவர் செய்து வருகிறார். சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களும் கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இக்கோவில் பக்தர்கள் அனைவரும் பூசாரி விஜயனின் மொபைல் எண்ணை வைத்துள்ளனர். காலை, - மாலை என இரண்டு நேரங்களிலும் இரண்டு மணிநேரம் கோவில் திறக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !