ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1365 days ago
தேவகோட்டை: தேவகோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம் , லட்சுமி பூஜை உட்பட இரண்டு கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. கோயில் பூஜகர்கள் ரமணி , சங்கரன் பூஜிக்க பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி அபிஷேகம் செய்தார். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ் , அறநிலையத்துறை ஆய்வாளர் மூவலிங்கம் , ஜமீன்தார் சோமநாராயணன் , ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் , அதிமுக நகர செயலாளர் ராமச்சந்திரன் , திமுக நகர செயலாளர் பாலமுருகன், எல்ஐசி ஏஜெண்ட் வெங்கடாசலம் , உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகிகள் கணேசன் , வீரசேகரன் , வரவேற்றனர்.