உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

ஈரோடு: சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

ஈரோடு, சூரம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் விழா கடந்த 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நேற்று முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி,  கோவில் பூசாரி கேசவன் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சூரம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !