முனீஸ்வரர் சுவாமி கோயில் வருடாபிஷேக விழா
ADDED :1513 days ago
கன்னிவாடி: கோனூர் முனீஸ்வரர் சுவாமி கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. விநாயகர் பூஜையுடன் துவங்கி, மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. பொங்கல் வழிபாடு, கிராம அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.