பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி
ADDED :1446 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.தொடர்ந்து கால பைரவருக்கு அபிஷேக ,ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். வடை மாலை அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.