செஞ்சி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4867 days ago
செஞ்சி: செஞ்சி மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள மகா மாரியம்மன் கோவிலை புதுப்பித்துள்ளனர். இதில் புதிதாக மூன்று நிலை ராஜ கோபுரம், மகா மண்டபம், விநாயகர், முருகர், ராஜகாளியம்மன், நவக்கிரக சன்னதி அமைத்துள்ளனர். இதற்கான கும்பாபிஷேகமும், ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன், சர்க்கரை குளக்கரை மீதுள்ள காளியம்மனுக்கு கலசாபிஷேகமும் நேற்று நடந்தது.நேற்று காலை 9.30 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு காலை 10 மணிக்கு ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் மாக கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அறங்காவலர் அரங்கஏழுமலை, உபயதாரர்கள், புதுச்சேரி சப்தகிரி சிவக்கொழுந்து, ராமலிங்கம், செஞ்சி எம்.எல்.ஏ., கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ஏழுமலை, சேர்மன் லட்சுமி சேகர் கலந்து கொண்டனர்.