உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் ஏராளமான பகுதிகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். நேற்று வரதராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து திருமணமான தம்பதிகள், விரைவில் திருமணம் ஆக வேண்டி, ஆண்கள், பெண்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கெட்டி மேளம், நாதஸ்வரம் ஒலிக்க திருக்கல்யாணம் நடந்தது. அர்ச்சகர்கள் குழுவினர் கூறுகையில்: வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண பூஜை விசேஷமானது. பூஜையில் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டியும், கொரோனா தொற்று முழுமையாக ஒழிந்து, பொதுமக்கள் சுபிட்சமாக வாழ சிறப்பு பூஜைகள் நடந்தது என்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !