களைகட்டிய காமன் பண்டிகை
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி டான்டீ பகுதியில் காமன் பண்டிகை களை கட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது காமன் பண்டிகை. தொடர்ச்சியாக 15 நாட்கள் விரதம் இருந்து, விநாயகர், சிவன் மற்றும் பார்வதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில் காமன் பண்டிகை திடலில் நடக்கும் சிறப்பு பூஜையில் ரதிமன்மதன் திருமணம் மற்றும் காமன் பண்டிகை குறித்த புராண வரலாற்றை நினைவு கூறும் வகையில் பண்டிகை கொண்டாடப்படப்பட்டது. சேரம்பாடி டான்டீ தோட்டக் கழகம் சரகம் எண் 3-ல் நடந்த இந்த நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது . தொடர்ந்து கலர் நடத்தினர் பாபு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ரதி மன்மதன் படத்தில் கண் திறப்பு விழாவும், சிவனை அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பன்னிரண்டு முப்பது மணிக்கு நடந்த ரதி-மன்மதன் திருமண நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அனைத்து தெய்வங்கள் ஆசீர்வாதம் செய்வது காளியம்மன் வருகை அசோகன் வீரபுத்திரன் வருகை, மன்மதன் வில்லெடுத்து சிவனிடம் போருக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5-30 மணி அளவில் நடைபெற்ற சிவன் மதனை எரிக்கும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் பக்தர்களை நெகிழச் செய்தது. தொடர்ந்து நேற்று மதியம் 11 மணிக்கு கங்கையில் குடித்தல் பெற்ற நிலையில், இன்று இரவு 7 மணிக்கு சிவன் மதனுக்கு உயிர் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அழைப்பாளராக காமன் மாஸ்டர்கள் ராமச்சந்திரன், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.-. படங்கள் மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.