உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம் சுரத்குமார் 21ம் ஆண்டு ஆராதனை

யோகி ராம் சுரத்குமார் 21ம் ஆண்டு ஆராதனை

திருவண்ணாமலை: பகவான் யோகிராம் சுரத்குமாரின், 21ம் ஆண்டு ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், 21ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் ஹோமம் மற்றும் அதிஷ்டாசனத்தில் அபிஷேகம் நடந்தது. மகன்யாசம், ஏகாதச ருத்ரம் மற்றும் அதிஷ்டாசனத்தில் மஹா அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை நேற்று நடந்தது. பின் தீர்த்த நாராயண பூஜை, பகவான் அனுபவங்கள் பகிர்வு, பகவான் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரத ஊர்வலம் மற்றும் ஆர்த்தி நடந்தது. நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !