விஜயவாடாவில் இருந்து காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை
சித்தூர் : காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 24 .2. 2022 வியாழக்கிழமை கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கிநடைபெற்று வருகிறது . இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோயில் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் துர்க்கை அம்மன் கோயில் அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆகியோர் நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்ததோடு ஞானபிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பட்டு வஸ்திரங்களையும் சீர்வரிசை பொருட்களையும் கோயில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலைமீது சுமந்து ஊர்வலமாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிவன் கோயில் அர்ச்சகர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் , கோயில் அர்ச்சகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.