சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய சிறப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர்: சமுதாயத்தின் அஸ்தி வாரங்களான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நேற்று (27 ம் தேதி) நடைபெற்றது. பாரதப் பெருமையை உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125-ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களது ஆற்றலை மேம்படுத்தும் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது. இன்றைய சூழலில் ஆசிரியர்கள், சிரமங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி ஆசிரியர்கள் உரையாற்றினர். உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் யதீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியாம்பா ஆசிரியர்கள் மகத்தானவர்கள் என்பது குறித்து விளக்கினார். ஆசிரியர்களின் பொறுப்பும், சிறப்பும் குறித்து சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரை ஆற்றினார். உளுந்தூர்பேட்டை பகுதிகளில் உள்ள 47 பள்ளிகளைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் 150 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் சுவாமிஜியின் நூல்கள் வழங்கப்பட்டன. நல்லாசிரியராகச் செயல்பட இனி பொறுப்பேற்போம் என்று அனைத்து ஆசிரியர்களும் உறுதி ஏற்றனர். ஸ்ரீராமகிருஷ்ண பக்தர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் திரு செந்தில் முருகன் மற்றும் செல்வி கலைவாணி ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.