சிவஜெயந்தி விழா: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1356 days ago
கூடலூர்: கூடலூர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈசுவரிய விஷ்வ வித்யாலயம் மையத்தில், 86-வது சிவ ஜெயந்தி விழா நேற்று, நடந்தது. விழாவுக்கு மையத்தின் மாவட்ட துணைப் பொறுப்பாளர் ருக்மணி தலைமை வகித்து, சிவ ஜெயந்தி விழா குறித்து விளக்கினார். தொடர்ந்து கூடலூர் பொறுப்பாளர் ரேணுகா தலைமையில் தியான நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தியானத்தில் ஈடுபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், கூடலூரை சேர்ந்த பழனியப்பன், கூடலூர் பொறுப்பாளர்கள் பாஸ்கரன், தங்கமணி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.