துர்காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :4868 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த வத்தல்மலை, பொன்னாவரான்குட்டை முத்துமாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்ட துர்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, புண்யாகவாசம், நான்காம் காலபூஜை, காளிகாதேவி, காயத்ரி, மாலமந்தர, மூலமந்திர ஹோமம், பூர்ணாபூதி, தீபாரதனை, காலை 7 மணிக்கு நாடிசந்தனம், யாத்ராதானம், காலை 7.30 மணிக்கு கலச புறப்பாடு, பால்குட ஊர்வலம், 9 மணிக்கு, 32 அடி உயர ஸ்ரீமஹா துர்காளிக்கு கும்பாபிஷேகம், தசாதரிசனம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இரவு 10 மணிக்கு நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் பூசாரி கிருஷ்ணன், சிவப்பிரகாசம், முத்து மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.