குமாரசித்தன்பட்டி கோயில் கும்பாபிஷேக விழா: நாளை நடக்கிறது
தூத்துக்குடி: புதூர் அருகேயுள்ள குமாரசித்தன்பட்டி சித்திவிநாயகர், பூர்ண சமேத அய்யனார், பதினெட்டாம்படி கருப்பசாமி குதிரை திறப்புவிழா மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. விழாவில் இன்று இரவு 8மணிக்கு கணபதிபூஜை, வாஸ்துசாந்தி, கும்பஅலங்காரம், சங்கலப்ம் சயனவசம், யாகசாலை ஆரம்பம். ஹோமங்கள் முதல்கால தீபாரானையும் அன்று இரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் யந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு கணபதி பூஜை, கும்பாபூஜை, நவக்கிரஹ ஹோமங்கள், சாஸ்தா ஹோமம், கோமாதாபூஜை, சுமங்கலி பூஜை, லட்சுமிபூஜை, நாடிசந்தனம், இரண்டாம் கால பூர்ணாகுஹூதி,தீபாராதனை,குடம்புறப்பாடு 11 மணிக்குமேல் 11.30 மணிக்குள் குரு ஓரையில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழாவில் ராமசாமிசுவாமி, எம்எல்ஏ மார்க்கண்டேயன, புதூர் யூனியன் சேர்மன் தனஞ்செயன், ஒன்றியகவுன்சிலர் ஞானகுருசாமி, டவுன்பஞ்சாயத்து தலைவர் பெயரியபூசு உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்துள்ளனர்.