உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாரில் தங்கரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் வீதியுலா

திருநள்ளாரில் தங்கரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் வீதியுலா

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி நேற்று தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் சுவாமி வீதி உலா நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்துவருகிறார். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 10மணிக்கு முதல்கால அபிஷேக பூஜை துவங்கியது.இதில் தர்பையில் முளைத்த சுயம்புவான தர்பாரண்யேஸ்வர்,செண்ப தியாகராஜர்.பிரணாம்பிகை அம்பாள், சனிஸ்வர பகவான் ஆகியோருக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடந்தது.நேற்று காலை பிரணாம்பிகை அம்பாள் சமேதராக தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அரும்பாலித்தார்.பின் தெற்குவீதி,வடக்குவீதி உள்ளிட்ட நான்கு வீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !